கிராம நிர்வாக அலுவலரின் காருக்கு தீ வைப்பு

நாகூரில், கிராம நிர்வாக அலுவலரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-21 18:45 GMT

நாகூர்:

நாகூரில், கிராம நிர்வாக அலுவலரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்

நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. நாகூர் அருகே உள்ள வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் இவர் தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அவரது காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர் பார்த்து தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காருக்கு தீவைப்பு

இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக காருக்கு தீவைக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகூரில் கிராம நிர்வாக அலுவலரின் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்