சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர் பலி

சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர் பலி

Update: 2022-10-17 21:32 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிமியோன் (வயது 46). இவர் கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ.வில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பணி முடிந்து. மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சுசீந்திரம் புறவழிச்சாலையில் உள்ள பேக்கரி அருகே வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சிமியோன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிமியோன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய மனைவி ஜெபமலர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்