நாட்டு துப்பாக்கி வெடித்து காயம் அடைந்தவர் பலி

வேப்பந்தட்டை அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து காயம் அடைந்தவர் பலியானார்.

Update: 2022-11-19 19:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் மனோகரன் (வயது 47). அதே பகுதியைச் சேர்ந்த ராஜாகண்ணு மகன் துரைராஜ் (48). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று அதிகாலை நாட்டு துப்பாக்கி மூலம் அரசலூர் மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மனோகரனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து அனுமதி இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து துரைராஜை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பிள்ளையார்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்