மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.

Update: 2023-05-02 19:00 GMT

சிவகங்கை மாவட்டம், செங்கமாரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 58). இவர் நேற்றுமுன்தினம் அரிமளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கே.புதுப்பட்டி சாலையில் செங்கமாரி நோக்கி சென்று கொண்டிருந்தார். நாட்டம்பட்டி கீரத்தான் கண்மாய் பகுதியில் வந்த போது ராஜமாணிக்கம் மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்