தாயில்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சி கலைஞர்காலனியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 41). இவர் ராஜாபாளையத்தில் தற்காலிகமாக நில அளவையராக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் மாடியில் தூங்கினார். பின்னர் தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சின்னத்துரையின் மனைவி கற்பகதேவி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.