சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும் என ஜெயலலிதா கூறினார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-02-23 06:45 GMT

மதுரை,

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆர்.பி.உதயகுமார் இங்கு எழுப்பியுள்ள அம்மா கோயிலில் இன்று மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பு வர வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அங்கு இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள்; நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் வேண்டி கொண்டேன். அடுத்த சில நிமிடத்திலேயே நல்ல செய்தி வந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என நேற்று தகவல் வந்ததும், எனக்கு இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொடுத்த வரம். தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும் என ஜெயலலிதா கூறினார்.

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. அதிமுக குடும்ப கட்சி கிடையாது; மக்களுக்காக உழைக்கும் கட்சி. இனிமேல் அதிமுக ஒரே அணிதான். மூன்றாக உள்ளது. நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம்.

வாக்காளர்களை அடைத்து வைத்து பிரியாணி கொடுத்தாலும் அவர்கள் எங்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள். "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்