கடம்பூர் அருகே வேன் கவிழ்ந்தது டிரைவருக்கு கை முறிந்தது

கடம்பூர் அருகே வேன் கவிழ்ந்தது டிரைவருக்கு கை முறிந்தது

Update: 2023-08-01 22:07 GMT

டி.என்.பாளையம்

உள்ள கோட்டமாளத்தில் இருந்து கடம்பூர் நோக்கி ஒரு சரக்கு வேன் சென்றுகொண்டு இருந்தது. கடம்பூரை சேர்ந்த தங்கவேல் (வயது 28) என்பவர் வேனை ஓட்டினார். அணைக்கரை பள்ளம் என்ற இடம் அருகே செல்லும்போது ஒரு வளைவில் நிலை தடுமாறிய வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தங்கவேலுக்கு இடது கை முறிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் அவரை மீட்டு பசுவனாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்