பள்ளத்தில் வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி
நிச்சயத்தார்த்த விழாவுக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழந்தார். 18 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நிச்சயத்தார்த்த விழாவுக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழந்தார். 18 பேர் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கான்சாபுரத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவருடைய மகனுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் மதுரையில் சம்பவத்தன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள ராபர்ட் தனது உறவினர்களுடன் வேனில் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.
வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டினார். நிச்சயத்தார்த்த விழாவை முடித்துவிட்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். அழகாபுரி அருகே காடனேரி விலக்கு பகுதியில் சென்றபோது, திடீரென வேன் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
தொழிலாளி பலி
வேனில் பயணம் செய்த தொழிலாளி சில்வர்ஸ்டார் (வயது 50) சம்பவ இடத்திேலயே பலியானார். வேனில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராபர்ட் கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.