வேன் கவிழ்ந்து முதியவர் பலி

வேன் கவிழ்ந்து முதியவர் பலி

Update: 2023-03-27 19:42 GMT

பேராவூரணியில் வேன் கவிழ்ந்து முதியவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கோவிலில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. பின்னர் பேராவூரணி திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. திருமணம் முடிந்து அவரது உறவினர்கள் வேனில் பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 34), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), அவரது சகோதரி முத்துமீனா (24), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த லதா (45), சிவகங்கை மாவட்டம் நாட்டார்வள்ளியை சேர்ந்த ஆனந்தி (22), அவரது 8 மாத பெண் குழந்தை மற்றும் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த ஜெயா ( 60), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த நடராஜ் (70) ஆகியோர் காயமடைந்தனர்.

முதியவர் சாவு

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம்அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக்திவேல் என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்