வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-09-03 20:00 GMT

நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயமடைந்தனர்.

வேன் கவிழ்ந்து விபத்து

மதுரை அருகே உள்ள கீழவளவு, பொன் அமராவதி, இஸ்மாயில் நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வேனில் வந்தனர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று மாலையில் வேனில் மதுரைக்கு புறப்பட்டனர்.

நெல்லை அருகே பொன்னாக்குடி மேம்பாலத்தில் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

17 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் இருந்த ஜமீனா பீவி (வயது 65), செய்யது முகமது (54), மூமினா பீவி (43), பாத்திமா பீவி (49), அலீஸ் பாத்திமா (23), முகமது ஹனீஷ் (13), சுபைதா பானு (16), அப்துல் சலாம் (25), முகமது பாசில் (13) உள்ளிட்ட 17 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்