வேன் கவிழ்ந்தது; 3 பேர் படுகாயம்
காரியாபட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
மதுரை, தனக்கன்குளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 50) என்பவர் தனது குடும்பத்தினர் 20 பேருடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிபட்டியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு மொட்டை எடுக்கும் நிகழ்ச்சிக்காக வேனில் சென்றார். வேனை தனக்கன்குளத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது 36) என்பவர் ஓட்னார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு திரும்ப வந்து கொண்டு இருந்தனர்.
3 பேர் படுகாயம்
அப்போது காரியாபட்டி அருகே கல்குறிச்சி புறவழிச்சாலை பகுதியில் திடீரென வேன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர், வேனில் பயணம் செய்த கலாமணி (45), கலா (41) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.