கடலூர் அருகே சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய அய்யப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய அய்யப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.
கடலூர்,
கடலூர் மாவட்டம் அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய அய்யப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே சுதாரித்து கொண்ட அனைவரும் வேனில் இருந்து வெளியேறினர். டெம்போ வேன், வேனில் பயணித்த 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டெம்போ வேன் முழுமையாக தீயில் எரிந்து கருகியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.