விபத்தில் வேன் டிரைவர் பலி

விபத்தில் வேன் டிரைவர் பலியானார்

Update: 2023-01-10 20:37 GMT

வாடிப்பட்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் கதிரேசன்(வயது 25). வேன் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முருகானந்தம்(40). இவர்கள் இருவரும் நேற்று கொடைரோட்டில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்குச் சென்றனர். அப்போது வாடிப்பட்டியில் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதமாக லாரி மீது வேன் மோதியது. இதில் கதிரேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்