இந்தியா - இலங்கை சர்வதேச தொடர் பயணிகள் கப்பல் சேவையை மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்.

சர்வதேச தொடர் பயணிகள் கப்பல் சேவையை மத்திய மந்திரி சென்னை துறைமுகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-06 17:09 GMT

சென்னை,

இந்தியா - இலங்கை இடையேயான சர்வதேச தொடர் பயணிகள் கப்பல் சேவையை மத்திய மந்திரி சோனோவால் சென்னை துறைமுகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கப்பலானது முதலில் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கும் அதன் பின்னர், திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய துறைமுகங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்பட உள்ளது. சுமாா் 1600 போ் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் ரூ.45 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.4.37 லட்சம் வரை பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்