நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவேண்டும்... அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-05-07 13:03 GMT

சென்னை,

இந்தியா முழுவதும் இன்று இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

இதனிடையே தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா 454 நாட்களுக்கு முன் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. நீட் ஒரு உயிர்க்கொல்லி தேர்வு, நீட் தேர்வால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்