சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கொடியம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 32). இவர் தனக்கு சொந்தமான லாரியை பாரம் ஏற்றுவதற்காக திண்டிவனம் தீர்த்தகுளம் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்தார். நேற்று இரவு பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்