லாரி ரோட்டில் கவிழ்ந்தது
நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி ரோட்டில் கவிழ்ந்தது.;
முக்கூடல்:
அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கணேசன் (வயது 55). லாரி டிரைவர். இவர் அம்பை கோவில்குளத்தில் இருந்து லாரியில் நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு இடைகால் - ஆலங்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் கவிழ்ந்தது. இதில் மூட்டைகள் லாரியில் இருந்து கீழே விழுந்தன. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.