வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து

திருவோணம் அருகே வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update:2023-10-22 01:56 IST

ஒரத்தநாடு:

செங்கிப் பட்டி-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அன்றாடம் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன.. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவோணம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள வயல் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஒரு லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்