20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

Update: 2022-06-17 13:45 GMT

வால்பாறை

வால்பாறை அருகே கக்கன் காலனியை சேர்ந்தவர் குரியன்(வயது 72). இவர் தனக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் குரியன் நேற்று சாலக்குடி பகுதியில் இருந்து வால்பாறையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றி வந்தார்.

வால்பாறை-சாலக்குடி சாலையில் புலியல்பாறை அருகே வந்தபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை லாரி இழந்தது. தொடர்ந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, லாரிக்குள் படுகாயம் அடைந்த சிக்கி இருந்த குரியனை மீட்டனர். தொடர்ந்து சாலக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்