சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி

சென்னையிலிருந்து நெல்லைக்கு பெயிண்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுடன் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் புழுதிபட்டி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கி விபத்துக்குள்ளானது.

Update: 2022-12-21 21:07 GMT

எஸ்.புதூர்

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 39) டிரைவர். இவர் சரக்கு லாரியில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பெயிண்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுடன் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் புழுதிபட்டி அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் திருமுருகன், கிளீனர் மனோஜ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் அவர்களுக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்