மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கவிழ்ந்தது
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கவிழ்ந்தது.
வாணியம்பாடி அருகே வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர் பாப்பனபள்ளி என்ற இடத்தில் இருந்து வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்திற்கு தனது உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து இறக்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றார்.
அப்போது சென்னையில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கிச் சென்ற கோழி ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். லாரி நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.
படுகாயம் அடைந்து சதீஷ்குமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.