நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

நன்னிலம் அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

Update: 2022-06-11 17:37 GMT

நன்னிலம்:

காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் நோக்கி நேற்று சென்றது. லாரியை கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜன்( வயது25) ஓட்டனார். நன்னிலம் அருகே சிகார்பாளையம் அருகே சாலை வளைவில் திரும்பும் போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த பிரிதிவிராஜன் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்