சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் பாதியில் நிறுத்தம் - பரபரப்பு சம்பவம்

இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

Update: 2023-06-10 17:50 GMT


சென்னை பட்டாபிராம் அருகே பாட்னா - பெங்களூர் ஹம்சபர் விரைவு ரெயில் இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், ரெயில் இன்ஜின் கோளாறு என கண்டுபிடிக்கபட்டது.

இன்ஜின் கோளாறு சரி செய்யப்படாத காரணத்தால் திருநின்றவூரிலிருந்து மற்றொரு இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரெ யில் இணைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ரெயில் நின்றிருந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். புதிய இன்ஜின் பொருத்தப்பட்ட நிலையில், மீண்டும் பெங்களூரூ நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்