ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
துவரங்குறிச்சி:-
துவரங்குறிச்சி அருகே உள்ள தெற்கு எல்லைக்காட்டுப்பட்டிக்கும், கஞ்சநாயக்கன்பட்டிக்கும் இடையே உள்ள மலை அடிவார ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் 2 பேர் டிராக்டர் டிப்பரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.