டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

மேல்மலையனூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானாா்.

Update: 2022-06-24 16:55 GMT

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் சரத்குமார்(வயது 25). டிரைவர். இவர் நேற்று மாலை டிராக்டரில் கள்ளப்புலியூரிலிருந்து இரும்புலி கிராமத்துக்கு புறப்பட்டார். அவருடன் இரும்புலி கிராமத்தை சேர்ந்த அருணகிரி மகன் தருண், மகள் தனஸ்ரீ ஆகியோரும் வந்துள்ளனர். இரும்புலி அருகே வந்தபோது சரத்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். தருண், தனஸ்ரீ ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்