அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
வாய்மேடு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது செய்யப்பட்டார்
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் வாய்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு குத்தகை சிவன் கோவில் அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி அதன் டிரைவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆயக்காரன்புலம் கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மாதவனை கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.