அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா செம்போடையை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி சரிதா. இவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி மணல் எடுத்ததாக வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலினுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்று அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் உரிமையாளர் ராமச்சந்திரன் (வயது42) மற்றும் செந்தில்(40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.