திண்டிவனம் தாலுகா அலுவலக கட்டிடத்தின் மேல் பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

திண்டிவனம் தாலுகா அலுவலக கட்டிடத்தின் மேல் பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-18 18:37 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் நேரு வீதியில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. சுமார் 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தாலுகா அலுவலகத்தில் கூட்ட அரங்கு உள்ளது. நேற்று மாலை கூட்ட அரங்க கட்டிடத்தின் மேல்பகுதியில் இருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து திடீரென கீழே விழுந்தன. அப்போது அங்கு யாரும் இல்லை. சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டதோடு, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்