கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பண்ருட்டி அருகே கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-23 16:57 GMT

பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 51), தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

மேலும் அவரது குற்ற செயலை தடுக்கும் பொருட்டு, சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், குண்டர் சட்டத்தில் சக்திவேலை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேலிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்