வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாளையங்கோட்டையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-23 19:52 GMT

பாளையங்கோட்டை சாந்தி நகர் 11-வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சினோத் (வயது 29). இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் பாலமுருகன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் இந்த பரிந்துரையை ஏற்று சினோத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்