வியாபாரியிடம் பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வியாபாரியிடம் பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-29 20:14 GMT

திருச்சி:

திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் கடந்த 10-ந் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், மயில்தினேஷ் என்ற தினேஷ்குமார் (வயது 25) மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணையில் தினேஷ்குமார் மீது கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்ததால் அவரை குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தினேஷ்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்