2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆலங்குளத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சரவணக்குமார் (வயது 37), மருதையா மகன் கொக்கிகுமார் என்ற சரவணகுமார் (27). இவர்கள் 2 பேர் மீதும் ஆலங்குளம், பாப்பாக்குடி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தென்காசி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், சரவணக்குமார், ெகாக்கிகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர்.