வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-17 19:22 GMT

நாங்குநேரி தாலுகா மருதகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஏசுபாதம் மகன் மில்டன் (வயது 36). இவர் மீது நெல்லை மாநகர பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு), பெருமாள்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். அதனை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று மில்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மில்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பெருமாள்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்