ரோந்துப்போலீசாரை பார்த்து விட்டு தண்டவாளத்தில் தப்பியோடிய திருடன்
ரோந்துப்போலீசாரை பார்த்து விட்டு தண்டவாளத்தில் தப்பியோடிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
ரோந்துப்போலீசாரை பார்த்து விட்டு தண்டவாளத்தில் தப்பியோடிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
பாகாலா ெரயில் நிலைய பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடிக்க முயன்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் ரெயில் தண்டவாளத்தில் குதித்து தப்பியோடினார். அவரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
அவரை ேபாலீசார் முறைப்படி விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை கூறினார். வாலாஜா பகுதியைச் சேர்ந்த ராகவன் என்றும், அவர் தனது பெயரை பல்வேறு இடங்களில் சிவா, விஜய், வெங்கடேசன் என்றும் மாற்றி கூறி வந்தார்.
ெரயிலில் பாகாலா வந்து பல்ேவறு வீடுகளில் திருடி விட்டு மீண்டும் ரெயிலில் வேலூர் ெசல்வார். தற்போது திருடி விட்டு வேலூர் செல்லும் வழியில் சிக்கியதாக தெரிவித்தாா். ஒரு திருட்டு வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அவர், தண்டனை முடிந்ததும் சிறையில் இருந்து வெளிேய வந்து மீண்டும் திருடும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
அவர் மீது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாகாலா போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள், எம்.ஆர்.பள்ளி போலீசில் 2, சந்திரகிரியில் 1, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசில் 1, ராமச்சந்திராபுரத்தில் 1 என மொத்தம் 8 போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 42 பவுன் நகைகள், 570 கிராம் வெள்ளிப் பொருட்கள், ஒரு மடிக்கணினி, 2 செல்போன்கள், இரும்புக்கம்பியை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.