தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு

தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடி சென்றனர்.;

Update: 2023-05-21 20:00 GMT

காரியாபட்டி, 

மானாமதுரை அருகே உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 29). இவர் நரிக்குடி அருகே வடக்குமடை கிராமத்தில் உள்ள சசிகுமார் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இவர் தினமும் தனது சொந்த ஊரிலிருந்து வடக்குமடை கிராமத்திற்கு வந்து தோட்ட வேலைகளை பார்த்து வந்தார். தோட்டத்தை பார்ப்பதற்காக மாரிக்கண்ணன் வந்த போது கம்பிவேலி உடைக்கப்பட்டு இருந்தது.பின்னர் தோட்டத்திற்குள் சென்று பார்த்தபோது கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க், மோடம், ஆண்டனா டவர், சிம் கார்டு போன்ற பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்