சாமி சிலைகள் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருட்டு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து அங்கிருந்த வெண்கலத்தால் ஆன ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை, ½ அடி பாம்புசிலை, தொங்கும் விளக்கு ஆகியவற்றை 2 வாலிபர்கள் திருடிக்கொண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள், கூச்சல் எழுப்பியதால் அந்த சாமி சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முருகவேல், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கோவில் சாமி சிலைகளை பரனூர் காலனியை சேர்ந்த பிரதீப்(வயது 23), கதிர்(21) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.