மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு

தெற்கு கள்ளிகுளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

Update: 2023-01-28 21:27 GMT

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் காமராஜர் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 35). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று மாலையில் மனோஜ் தனது வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அந்த பணத்தை அவர் மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் வைத்து இருந்தார். பள்ளிக்கூடம் விடும் நேரம் என்பதால் மகன்களை அழைத்துக் கொண்டு, செல்லலாம் என்று நினைத்த மனோஜ் மோட்டார் சைக்கிளை பள்ளிக்கு வெளியே நிறுத்திச் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்ைத திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்