இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

கருமத்தம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனது.

Update: 2023-08-31 21:30 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டியை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 55), விசைத்தறி உரிமையாளர். இவர் தனது விசைத்தறி கூடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.2 லட்சம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை தனது இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்து விட்டு விசைத்தறி கூடத்திற்கு புறப்பட்டார்.

வரும் வழியில் கருமத்தம்பட்டி-சோமனூர் ரோட்டில் உள்ள டீக்கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி டீ குடித்தார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்