மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டுபோனது.

Update: 2023-09-26 19:32 GMT

வேப்பந்தட்டை:

நகையை அடகு வைத்து...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பெருமாள்(வயது 60). விவசாயியான இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது 7 பவுன் நகையை அடமானம் வைத்து, ரூ.2 லட்சம் பெற்றார். பின்னர் வங்கியில் இருந்து வெளியே வந்த அவர், அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துள்ளார்.

இதையடுத்து வங்கியின் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர், தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு கையுறை வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த கடையில் கையுறை இல்லாததால், மீண்டும் தனது ேமாட்டார் சைக்கிளில் வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் உள்ள மற்றொரு எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்று கையுறை வாங்கியுள்ளார்.

திருட்டு

அந்த கையுறையை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைப்பதற்காக, அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அரும்பாவூர் போலீசில் பெருமாள் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மற்றும் கடைவீதியில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்