விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
விக்கிரவாண்டியில் விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(வயது 64). விவசாயி. இவரது வீட்டு கதவை மர்மநபர் உடைத்து உள்ளே புகுந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.