கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
பேரணாம்பட்டு அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.
பேரணாம்பட்டு அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.
ரூ.1 லட்சம் திருட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). கட்டிட மேஸ்திரி மற்றும் கட்டிட காண்டிராக்டர். இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விடுமுறை அளித்து விட்டு, மனைவி காயத்ரி மற்றும் தனது குடும்பத்தினருடன் கடந்த 2-ந் தேதி பெங்களூரு அருகே கோர்மின்னூர் பகுதியில் வசிக்கும் தனது மைத்துனி காவேரி வீட்டுக்கு சென்றார்.
முருகன் வீட்டின் அருகே வசிக்கும் அவரது மாமனார் மன்னன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மிவிளக்கு போடுவதற்காக முருகன் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது பின் பக்க கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, பணம் வைத்திருந்த துணிப்பை கீழே கீழேகிடந்தது.
இதைபார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக முருகனுக்கு தகவல் தெரிவித்தார். மர்ம ஆசாமிகள் முருகன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு பின்பக்க சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து லாக்கரில் துணி பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
நகைகள் தப்பியது
பீரோவின் மற்றொரு லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 11½ பவுன் நகை மற்றும் ரூ.18 ஆயிரம் மர்ம நபர்களின் கண்ணில் படாததால் அவை தப்பின. இது குறித்து நேற்று மாலை பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.