தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு

தொழிலாளி வீட்டில் பணம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-11 18:45 GMT

நெல்லை அருகே உள்ள உடையார்குளத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரின் மனைவி மகராசி (வயது 41). இவர்கள் 2 பேரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று கணவன், மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். வேலை முடிந்த பின்னர் வீடு திரும்பிய மகராசி வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த சுமார் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் நெல்லை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்