தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

கடையம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டுப்போனது.;

Update: 2023-01-27 18:45 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி வசந்தா. இவர்கள் இருவரும் ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சலவை தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் அவர்களது மகள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. வீட்டில் உள்ள 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருடு போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்