விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-12-30 18:47 GMT

பொன்னையை அடுத்த கீரைசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நேற்று காலை நாகேந்திரன் கூலி வேலைக்கு சென்று விட்டார். மனைவி அன்னக்கிளி வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வேலை முடிந்ததும் அன்னக்கிளி மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வீட்டில் இருந்த பீரோவின் லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அன்னக்கிளி பொன்னை போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச்சென்ற சம்பவம் கீரைசாத்து பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்