பீரோவில் இருந்த நகை திருட்டு

பீரோவில் இருந்த நகையை திருடி சென்றனர்.

Update: 2023-01-26 19:20 GMT

காரியாபட்டி

திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை கதவில் வைத்துவிட்டு விவசாய பணிக்காக சென்றார். பின்னர் அவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டினுள் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை பார்த்தபோது காணவில்லை. இதனால் காளியம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்