கடையின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் மதன் (வயது 33). இவர் தென்காசி சாலையில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்கும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று வேலை முடிந்த பின்னர் வழக்கம்போல் விற்பனைக்கு இருக்கும் இருசக்கர வாகனங்களை குடோனில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை கடையினை திறப்பதற்காக வந்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது குடோனில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மதன் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.