நகைக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

நகைக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2023-08-06 18:45 GMT

குழித்துறை:

அருமனை அருகே உள்ள உத்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜசேகர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வேலைக்கு வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பக்கம் உள்ள சாலையில் பார்க்கிங் பகுதியில் வைத்துவிட்டு கடைக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்