கோவில் பணத்தை மீட்டு தர வேண்டும்

திருவிழாவுக்காக வசூலிக்கப்பட்ட கோவில் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-06-24 15:01 GMT

வடமதுரை தாலுகா பிலாத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கோவில் வரி பணத்தை அப்பகுதியை சேர்ந்த காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவரிடம் கொடுத்தோம். தற்போது அந்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டால், காவலாளியும் அவருடைய மனைவி, 2 மகள்கள் என 4 பேர் எங்களை அவதூறாக பேசுவதுடன், மிரட்டலும் விடுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்க சென்ற கோவில் பூசாரி உள்பட 3 பேரை வடமதுரை போலீசில் புகார் கொடுத்து கைது செய்ய வைத்து விட்டனர். எனவே காவலாளி உள்பட 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் பணத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்