போலீஸ் விசாரணையின்போது மோதிரத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு
போலீஸ் விசாரணையின்போது மோதிரத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு
வடவள்ளி
கோவை வடவள்ளி பகுதியில் சம்பவத்தன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தொண்டாமுத்தூரை சேர்ந்த விஜய் (வயது 26) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதற்கிடையில் விசாரணையின்போது திடீரென விஜய் தனது கையில் அணிந்து இருந்த மோதிரத்தை விழுங்கிவிட்டார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இனிமா கொடுத்து மோதிரை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். இதையடுத்து கஞ்சா விற்பனை செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.