மோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை

வீரபாண்டி அருகே மோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-07-11 12:11 GMT

தேனி சிவராம் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 56). நேற்று இவர், வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபம் முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை ஒருவர் திருடி செல்ல முயன்றார்.

இதையடுத்து சின்னச்சாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சின்னச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்